உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வேலை வாய்ப்பு முகாம்; 88 பேருக்கு பணி நியமனம்

 வேலை வாய்ப்பு முகாம்; 88 பேருக்கு பணி நியமனம்

உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், 88 பேர் பணிநியமன ஆணை பெற்றனர்.உடுமலை அரசு கலைக்கல்லுாரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில், பல்வேறு நிறுவனங்களை அழைத்து வந்து இரண்டு நாட்கள் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.முகாமில் சென்னையை சேர்ந்த நிறுவனத்தில், 77 பேர், உடுமலையை சேர்ந்த இரண்டு நிறுவனங்களில், 11 பேர் வீதம், 88 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.கல்லுாரி முதல்வர் கல்யாணி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். கல்லுாரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர் சக்திவேல் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ