உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  திருமூர்த்திமலை ரோட்டில் ஆக்கிரமிப்பு; திணறும் வாகன ஓட்டுநர்கள்

 திருமூர்த்திமலை ரோட்டில் ஆக்கிரமிப்பு; திணறும் வாகன ஓட்டுநர்கள்

உடுமலை: திருமூர்த்திமலை ரோட்டின் இருபுறங்களிலும் அதிகரித்துள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளால் நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது; ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, உடுமலை வழியாக திருமூர்த்திமலைக்கு நாள்தோறும், சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். திருமூர்த்திமலை ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ், நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால், பராமரிக்கப்படுகிறது. இந்த ரோட்டில் பள்ளபாளையம் சந்திப்பு வரை, மூணாறு, மறையூர், அமராவதி அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் செல்கின்றன. தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் வரிசையாக அமைந்துள்ளன. இதனால், உடுமலை நகரில் இருந்து, பள்ளபாளையம் வரை, திருமூர்த்திமலை ரோட்டில், அதிக நெரிசல் நிலவுகிறது. ரயில்வே மேம்பாலம் தாண்டியதும், ஒன்றிய அலுவலக பஸ் ஸ்டாப்பில் இருந்து, நெரிசல் துவங்குகிறது. அங்கிருந்து பள்ளபாளையம் வரை, விசேஷ நாட்களில், வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. இதற்கு ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதே முக்கிய காரணமாகும். எலையமுத்துார் பிரிவில் இருந்து பள்ளபாளையம் வரை, ரோட்டோரத்தில், நுாற்றுக்கணக்கான தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். அங்கு நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல் அதிகரிக்கிறது. விபத்துகளும் ஏற்படுகிறது. முறையான அனுமதி இல்லாமல், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்படும் கடைகளால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. திருமூர்த்திமலை ரோட்டில், நிலவும் நெரிசலுக்கு தீர்வு காண, நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, விட்டு, 'பஸ் பே' அமைத்தால் நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. தற்போது, ரோட்டிலேயே பஸ்களை நிறுத்துவதால், பிற வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட துாரம் அணிவகுத்து நிற்கின்றன. ஆக்கிரமிப்பை அகற்றி விட்டு, பஸ்களை ஓரமாக நிறுத்துவதற்கான, 'பஸ் பே' அமைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை