உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கச்சேரி வீதியில் தீராத நெரிசல்

கச்சேரி வீதியில் தீராத நெரிசல்

உடுமலை; உடுமலை, கச்சேரி வீதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலால், அரசு மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள் பாதிப்பது தொடர்கதையாக உள்ளது.உடுமலை கச்சேரி வீதியில், தாலுகா அலுவலகம், தலைமை தபால் நிலையம், கோர்ட், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வரிசையாக அமைந்துள்ளன. குறுகலான இந்த ரோட்டில் இருபுறங்களிலும், வாகனங்களை தாறுமாறாக நிறுத்துகின்றனர்.இவ்வழியாகவே அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்களும் நெரிசலில் சிக்கி கொள்கின்றன. இப்பிரச்னைக்கு தீர்வாக, போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு செய்து ரோட்டோரத்தில் அத்துமீறி நிறுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ