உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லயன்ஸ் கிளப் சார்பில் பொறியாளர் தின விழா

லயன்ஸ் கிளப் சார்பில் பொறியாளர் தின விழா

திருப்பூர்; திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ் லயன்ஸ் கிளப் சார்பில் பொறியாளர் தினம் மற்றும் ஆசிரியர் தின விழா ஆகியன நடைபெற்றது. திருப்பூர், வஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள லயன்ஸ் நல அறக்கட்டளை அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் லயன்ஸ் கவர்னர்கள் சுரேஷ்குமார், நடராஜன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பட்டய தலைவர் வின்சென்ட், சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலாளர்கள் தண்டபாணி,ராம்குமார், பொருளாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். விழாவில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு லயன்ஸ் கிளப் உறுப்பினர்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பொறியாளர்களும், ஆசிரியர்கள் 14 பேருக்கும் கேடயம் மற்றும் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை