உபகரணங்கள் வினியோகம்
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளி குழந்தைகள், 28 பேருக்கு, மொத்தம், 2.70 லட்சம் மதிப்பில், சிறப்பு சக்கர நாற்காலி, வீல் சேர், டெய்ஸி ரீடர், கார்னர் சேர் ஆகியவை வழங்கப்பட்டன.