உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அனைவரும் திருவாசகம் படித்து பயன் பெற வேண்டும்

அனைவரும் திருவாசகம் படித்து பயன் பெற வேண்டும்

திருப்பூர்; 'மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தை அனைவரும் படித்து பயன்பெறவேண்டும்,' என, சொற்பொழிவாளர் சிவசண்முகம் பேசினார்.கொங்கு மண்ட ஆடல் வல்லான் அறக்கட்டளை சார்பில், திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, திருப்பூர், யுனிவர்சல் ரோடு, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெற்று வருகிறது.அதில், நேற்று சைவ சித்தாந்த ஆசிரியர் சிவசண்முகம் பேசியதாவது:குதிரை வாங்கி கொடுத்தது, வந்தி பாட்டிக்காக சுவாமி வந்து ஆட்கொண்டது என எல்லாம் முடிந்து, மாணிக்க வாசகர், திருப்பெருந்துறையில் வந்து இருக்கிறார். சுவாமியை காண ஆவலோடு வந்து, அவரது திருவடிகளை வணங்கி மகிழ்ந்தார். சுவாமி, மாணிக்க வாசகருக்கு மீண்டும் ஒருமுறை திருநீறு அணிவித்து, பெருமைப்படுத்துகிறார்.அந்த ஆசீர்வாதத்தை பெற்றபின், 'நமச்சிவாய வாழ்க' என்று மாணிக்கவாசகர் சிவபுராணம்பாடுகிறார். சென்னிப்பத்து, குழைத்தப்பத்து, அற்புதப்பத்து, அதிசயப்பத்து இவையெல்லாம் பாடுகிறார். நாமெல்லாம் மாணிக்கவாசகரை வணங்குவதோடு, அவர் அருளிய திருவாசகத்தை பயின்று பயன்பெறவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.சிவனடியார்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர். வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை, மாலை, 5:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை நடைபெறும் திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவில், அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ