உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்க அழைப்பு

முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்க அழைப்பு

உடுமலை; 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்கிற புதிய திட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்க, ஒரு கோடி ரூபாய் வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது.திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியிருப்பதாவது:இந்த திட்டத்தில், தொழில் துவங்குவதற்காக பெறப்படும் வங்கி கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.முன்னாள் படைவீரர்கள் மற்றும் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் மனைவி, திருமணம் ஆகாத மகள் மற்றும் விதவை மகள் ஆகியோர் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.தற்போது, வேளாண் தொடர்பான அனைத்து தொழில்கள், பட்டு வளர்ப்பு, கால்நடை பராமரிப்பு தொடர்பான தொழில் துவங்க வங்கி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், கலெக்டர் அலுவலக ஐந்தாவது தளம், அறை எண், 523ல் செயல்படும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். 0421 2971127 என்கிற எண்ணிலோ அல்லது tn.gov.inஎன்கிற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பி தொடர்பு கொண்டு, படிவத்தை பூர்த்தி செய்து வழங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ