உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செயல் அலுவலர் பணியிடங்கள் காலி; கோவில் நிர்வாக பணிகளில் சுணக்கம்

செயல் அலுவலர் பணியிடங்கள் காலி; கோவில் நிர்வாக பணிகளில் சுணக்கம்

திருப்பூர் : செயல் அலுவலர் பணியிடம் காலியாக இருக்கும் கோவில்களில், நிர்வாக பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக, பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள கோவில்களை, ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. நிர்வாக வசதிக்காக, பட்டியலில் சேரா கோவில்; பட்டியலிடப்பட்ட கோவில் என, பிரித்து நிர்வாகம் செய்யப்படுகிறது. வாரிய கணக்குப்படி, 38,615 கோவில்கள் உள்ளன.சிறிய கோவில்களுக்கு, ஆய்வாளர்கள் நிலையில், தக்கார் நியமனம் நடக்கிறது. மற்ற கோவில்களுக்கு, செயல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிக வருவாய் உள்ள கோவில்களுக்கு, செயல் அலுவலராக, இணை கமிஷனர் மற்றும் உதவி கமிஷனர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

பணிகள் ஸ்தம்பிப்பு

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, இணை கமிஷனர் மண்டலத்தில், முக்கிய கோவில்களுக்கு, செயல் அலுவலர் இல்லாததால், நிர்வாக பணி பாதிக்கப்பட்டுள்ளது. செயல் அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால், ஒரே செயல் அலுவலர், நான்கு கோவில்கள் வரை கவனிக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, கோவில் நிர்வாக பணி ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்துக்கான ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இல்லாததால், நிலம் மீட்டு பணிகள் மந்தகதியில் நடக்கின்றன. மற்ற அலுவலர்களை கூடுதல் பொறுப்பாக நியமனம் செய்வதால், பிற பணிகளும் பாதிக்கின்றன.ஹிந்து சமய அறநிலையத்துறை விரும்பியபடி, கோவில்களில் நிர்வாகம் முறையாக நடக்க வேண்டுமெனில், காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது, பக்தர்கள் எதிர்பார்ப்பு.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா நடந்து, எட்டு மாதங்களாகியும், சில பணிகளுக்கான செலவு கணக்கு தாக்கல் செய்யப்படாமல் இருப்பதாக, பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதேபோல், செயல் அலுவலர் பணியிடம் காலியாக இருக்கும் கோவில்களில், நிர்வாக பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, செயல் அலுவலர்களை நியமிக்க உரிய ஏற்பாடுகளை துவக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இது குறித்து, திருப்பூர் மண்டல ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியனிடம் கேட்டபோது, ''காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்கள், பதவி உயர்வு மற்றும் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படும்.உரிய முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டு, காலிப்பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபி ேஷகம் நடந்து, எட்டு மாதங்களாகியும்,சில பணிகளுக்கான செலவு கணக்கு தாக்கல் செய்யப்படாமல் இருப்பதாக, பக்தர்கள்கவலை தெரிவித்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை