உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர்; தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று, காங்கயம் ரோடு ரோஜா மகாலில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் தாவூது கைசர், மாநில செயலாளர்கள் மயிலை அப்துல் ரஹீம், நெல்லை பைசல் தலைமை வகித்தனர். திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்ட தலைவர் சிக்கந்தர்; செயலாளர் அன்சர்; பொருளாளர் தவுபிக்; துணைச் செயலாளர்களாக யாசர் அராபத், சித்திக், ஜெய்லானி, மீரான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி