கட்டுப்படுத்தும் வழிமுறைகளுடன் கண்காட்சி: வேளாண் துறையின் விளக்கம்: விவசாயிகள் நிம்மதி
திருப்பூர்: மனிதர்களுக்கு இயற்கை அளித்த மாபெரும் கொடைதான், ஆயிரக்கணக்கான வேர்களை கொண்ட கற்பக விருட்சமாகிய தென்னை மரம். ஒரு மரம், 4,500 ரூபாய் முதல், 6,000 வேர்களை கொண்டிருக்கிறது.தமிழகத்தில் மட்டும், 11.48 லட்சம் மரக்கன்றுகள் உள்ளன. ஒரு எக்டருக்கான தேங்காய் உற்பத்தி என்பது, 11 ஆயிரத்து, 256 என, தோட்டக்கலைத்துறை கணக்கிட்டுள்ளது. நமது நாட்டின், சராசரி தேங்காய் உற்பத்தி என்பது, 9,123 ஆக உள்ளது; தமிழகத்தின் தேங்காய் உற்பத்தி அதிகம். சமீபகாலமாக, தென்னையில் பூச்சி மற்றும் நோய்கள் தாக்கம், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ளது. கடும் மகசூல் இழப்பால், விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு, கருந்தலைப்புழு, எரியோபைட் சிலந்தி, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் போன்ற பூச்சிகளால் நோய் தாக்கம் ஏற்படுகிறது.குருத்தழுகல் நோய், தஞ்சாவூர் வாடல் நோய், இலைகருகல் நோய், கேரளா வேர் வாடல் நோய், பென்சில் முனை குறைபாடு போன்ற சத்து குறைபாடுகளாலும், தென்னை மரங்கள் பாதிக்கப்படுகின்றன.ஒருங்கிணைந்த தென்னை சாகுபடி முறையில், ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து நீர் மேலாண்மை முறைகளை பின்பற்றினால், தென்னை நோய்களை கட்டுப்படுத்தி, மகசூலை மேம்படுத்தலாம் என, தோட்டக்கலை அழைப்புவிடுத்துள்ளது. கண்காட்சியில் விழிப்புணர்வு
இந்நிலையில், மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில், கலெக்டர் அலுவலக விவசாயிகள் கூட்டரங்கில், தென்னை நோய்தாக்கம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. உதவி இயக்குனர் சுரேஷ்குமார், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.தென்னையை தாக்கும் பூச்சி நோய் மற்றும் சத்து குறைபாடு நோய்கள் மற்றும் அவற்றில் இருந்து தென்னை மரங்களை பாதுகாப்பது குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்தினர். தமிழக அரசு சார்பில், அச்சிடப்பட்டுள்ள, தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான கையேடும் இலவசமாக வழங்கப்பட்டது.தென்னை மரத்துக்கான பூச்சி தாக்கல் நோயின் அறிகுறிகள், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது. இதேபோல், தென்னையை தாக்கும் சத்துகுறைபாடு பாதிப்பு மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில், ஒவ்வொரு வகையான நோய் தாக்கலுக்கு ஆளான, தென்னை மர ஓலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அருகிலேயே, அவற்றை கட்டுப்படுத்த பயன்படுத்த வேண்டிய மருந்து வழிமுறைகளும் விளக்கப்பட்டிருந்தது. அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள், இக்கண்காட்சியை பார்வையிட்டு, சந்தேகங்களை கேட்டறிந்தனர்.தென்னை மரத்துக்கு, சில வகை பூச்சிகளால் நோய் தாக்கம் ஏற்படுகிறது. பல வகை பூச்சிகளால், மரங்களுக்கு நன்மையும் கிடைக்கும். அதன்படி, தென்னை மர சாகுபடிக்கு நன்மை செய்யும், 24 வகையிலான பூச்சியினங்கள் குறித்தும், படத்துடன் விளக்கப்பட்டுள்ளது. தென்னந்தோப்புக்குள், ஊடுபயிராக எவ்வகை பயிரிடலாம் என்ற விவரமும் இடம்பெற்றுள்ளது. தென்னை மரங்களுக்கு இடையே வாழை, மக்காச்சோளம், மஞ்சள் மற்றும் வெங்காயம், மரவள்ளி கிழங்கி ஆகியவற்றை ஊடு பயிராக சாகுபடி செய்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலைத்துறை வழங்கிய கையேடு, தென்னை விவசாயிகளுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளதாக, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.கண்காட்சியில், ஒவ்வொரு வகையான நோய் தாக்கலுக்கு ஆளான, தென்னை மர ஓலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அருகிலேயே, அவற்றை கட்டுப்படுத்த பயன்படுத்த வேண்டிய மருந்து வழிமுறைகளும் விளக்கப்பட்டிருந்தது