உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாய்மை பணியாளர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

துாய்மை பணியாளர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

உடுமலை: உடுமலை நகராட்சியில், துாய்மைப்பணியாளர்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடந்தது.உடுமலை நகராட்சி, அரவிந்த் கண் மருந்துவமனை சார்பில், நகராட்சி அலுவலகத்தில் துாய்மை பணியாளர்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடந்தது. நகராட்சி கமிஷனர் சரவணகுமார் தலைமை வகித்தார்.முகாமில், 136 பணியாளர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 32 பணியாளர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது. 16 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. முகாமில், டாக்டர்கள் மோகன்ராஜ், சூரஜ், முத்து வெங்கட், சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், சிவக்குமார், செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி