உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடிகர் திலகத்தை மறக்காத ரசிகர்கள்

நடிகர் திலகத்தை மறக்காத ரசிகர்கள்

கடந்த, 1952ல் வெளியான 'பராசக்தி' சினிமாவில், நடிகர் சிவாஜி, அனல் தெறிக்க பேசும் வசனங்கள் இன்றும் பிரபலம். பராசக்தி என்ற பெயரே, அப்படத்துக்கு பெருமை சேர்த்தது என்றால் அது மிகையல்ல. 'பராசக்தி' தலைப்பு மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.அகில இந்திய சிவாஜி மன்ற செயற்குழு உறுப்பினர் சிவகுமார் பிரபு கூறியதாவது:முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வசனத்தை சிவாஜி பேசி நடித்த படம், பராசக்தி. இந்த படம், இருவருக்குமான ஒரு அடையாளமாக இன்றளவும்இருந்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் பழைய சினிமா தலைப்புகளை வைத்து புதிய படங்கள் எடுப்பது டிரெண்டாக இருக்கிறது.இது, தலைப்புகளுக்கான பஞ்சம் என்று தான் சொல்ல வேண்டும். பழைய பராசக்தி படத்தை டிஜிட்டல்மயமாக்கி ரீ-ரீலீஸ் செய்வதாகவும் பேச்சு உள்ளது. சிவாஜிக்கு நிகராக எந்த நடிகரையும் எங்களால் ஒப்பிடக்கூட முடிய வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ