உழவர் உற்பத்தியாளர் நிறுவன கூட்டம்
உடுமலை: குடிமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில், ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. குடிமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் மவுன குருசாமி தலைமை வகித்தார். இயக்குனர் ராஜகோபால் வரவேற்றார். வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் கோகிலா தேவி, ராஜகோபால் ஆகியோர், வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினர். வேளாண் துணை இயக்குனர் வெங்கடாச்சலம், உதவி வேளாண் அலுவலர் கோவிந்தன் ஆகியோர், அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள், வேளாண் வணிகம் குறித்து விளக்கினர். ஈரோடு துல்லிய பண்ணைய இயக்குனர் ஜெயச்சந்திரன், வேளாண் அலுவலர்கள் கார்த்திகா, செல்வக்குமார், கோதண்டபாணி குடிமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் நிறுவன செயலாளர் பெரியசாமி, இயக்குனர் ஜெயமணி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். இதில், நிறுவனம் சார்பில், இ-சேவை மையம், உரம், இடு பொருட்கள் விற்பனை மையம் அமைத்தல், நிறுவன தயாரிப்புகளுக்கு அக்மார்க் முத்திரை பெறுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.