மேலும் செய்திகள்
குறைந்த செலவில் செடி; அவரை விவசாயிகள் ஆர்வம்
12-Jun-2025
உடுமலை; பருவ மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், நடப்பு சீசனில், உடுமலை வட்டாரத்தில், பரவலாக பீட்ரூட் சாகுபடி செய்துள்ளனர்.உடுமலை கணபதிபாளையம், ராகல்பாவி, வெனசப்பட்டி, கொங்கல்நகரம், மொடக்குபட்டி, விருகல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, ஆண்டு முழுவதும் பீட்ரூட் சாகுபடி மேற்கொள்கின்றனர்.களிமண் சாகுபடி பரப்புள்ள பகுதிகளில், இந்த சாகுபடியில், நல்ல மகசூல் கிடைத்து வந்தது. ஏக்கருக்கு, 2 கிலோ விதைகளை நடவுக்கு பயன்படுத்துகின்றனர். சீதோஷ்ண நிலை மாற்றத்தால், ஏற்படும் நோய்த்தாக்குதலுக்கு, 3 முறை மருந்து தெளிக்கின்றனர்.கடந்த சீசனில், அதிக வெயில் மற்றும் மழை இல்லாததால், சாகுபடியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, மகசூல் குறைந்தது.நிலத்தடி நீர்மட்டமும் குறைந்ததால், கிணறு மற்றும் போர்வெல்களில், தண்ணீர் இல்லாமல், குறைவான பரப்பளவிலேயே பீட்ரூட் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கி பெய்து வருகிறது. எனவே, பீட்ரூட் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'பீட்ரூட் சாகுபடியில், ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. நல்ல சீதோஷ்ண நிலை இருந்தால், ஏக்கருக்கு, 12 டன் வரை மகசூல் கிடைக்கும். பருவமழை பெய்து வருவதால், நல்ல மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்' என்றனர்.
12-Jun-2025