மேலும் செய்திகள்
மாவட்ட பா.ஜ., ஆலோசனை
03-Feb-2025
திருப்பூர்:திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், தொழில் முனைவோர் கலந்து கொண்ட பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது.மத்திய அரசின் 2025 -26ம் ஆண்டுக்கான பட்ஜெட், கடந்த, 1ம் தேதி அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இடம் பெற்றுள்ள புதிய திட்டங்கள் மற்றும் வரவேற்கத் தக்க அம்சங்கள் குறித்து, பா.ஜ., சார்பில் அனைத்துப் பகுதியிலும் பட்ஜெட் விளக்க கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் நேற்று இக்கூட்டம் திருப்பூர் காயத்ரி ஓட்டல் வளாகத்தில் நடந்தது.கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் மலர்க்கொடி, செந்தில்வேல், 'பாயின்ட்' மணி, சின்னசாமி, மாவட்ட நிர்வாகிகள் நடராஜ், பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, மாநில ஓ.பி.சி.,அணி பொது செயலாளர் வீரர் திருநாவுக்கரசு ஆகியோர் பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சம் குறித்து சிறப்புரை ஆற்றினர்.முன்னதாக, குஷ்பு பேசுகையில், ''மத்திய அரசு ஒரு தாயின் கண்ணோட்டத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் அதன் தேவைகளை அறிந்து நிதிகளை ஒதுக்கி, திட்டங்களை வழங்கியுள்ளது. பா.ஜ., எதிர்ப்பு என்ற ஒற்றை இலக்குடன் மட்டுமே செயல்படும் தமிழக அரசு இதில் குற்றம் கூறி வருகிறது.மத்திய அரசு எந்த நிதியையும் வழங்கவில்லை என்று எப்படி பேச முடிகிறது எனத் தெரியவில்லை. பட்ஜெட்டை முழுமையாக படிக்காமல் யாராவது எழுதித் தந்த துண்டுச் சீட்டை மட்டுமே வைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்,'' என்றார்.
03-Feb-2025