காற்றில் நடனமாடிய கால்கள்: பாட்மின்டனில் பறந்த பந்து
திருப்பூர்; முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரியில், தெற்கு குறுமைய, 14 வயது மாணவர் பிரிவுக்கு கால்பந்து போட்டி நேற்று நடந்தது. எஸ்.பெரியபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அகோரம் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் போட்டிகளை துவக்கி வைத்தார். முதல் போட்டியில், கே.செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி அணி - கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி அணிகள் மோதின. இதில், 1 -0 என்ற கோல்கணக்கில், விவேகானந்தா வித்யாலயா பள்ளி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. கண்காணிப்பு உறுப்பினர் முருகன் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.பதினான்கு வயது பிரிவில், 14 அணிகள் பங்கேற்ற நிலையில், நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டது; எட்டு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. அவற்றில் இருந்து, நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறின. நடுவர்களாக பாலசுப்ரமணியம், ஜம்பு, ஜெயக்குமார், பாலமுருகன், மோகனசுந்தரம் ஆகியோர் பணியாற்றினர். போட்டா போட்டி
பாட்மின்டன் போட்டியில் பிரன்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி அதிக வெற்றிகளை குவித்து, பாராட்டு பெற்றது. 14 அணிகள் பங்கேற்பால், கால்பந்து போட்டி 'நாக்-அவுட்' முறையில் நடத்தப்பட்டது.திருப்பூர் தெற்கு குறுமைய பாட்மின்டன் போட்டி, தாராபுரம் ரோடு, மோகன்ஸ் பாட்மின்டன் அகாடமியில் நேற்று நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் தலைமை வகித்தனர். பிரன்ட்லைன் பள்ளியின் இணைச் செயலர் வைஷ்ணவிநந்தன், மோகன்ஸ் அகாடமி நிர்வாகிகள் கார்த்திகேயன், ஷியாம் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.வெற்றி பெற்றவர் விவரம்: மாணவர், பதினான்கு வயது தனிநபர் பிரிவில், பிரன்ட்லைன் அகாடமி அணி முதலிடம், காந்தி வித்யாலயா இரண்டாமிடம். 17 மற்றும், 19 வயது இருபிரிவிலும் பிரன்ட்லைன் முதலிடம். 17 வயது பிரிவில், செயின்ட் ஜோசப் மெட்ரிக். 19 வயது பிரிவில் விவேகானந்தா வித்யாலயா இரண்டாமிடம். இரட்டையர் பிரிவில், 14, 17 மற்றும் 19 வயது மூன்று பிரிவிலும் பிரன்ட்லைன் அணி முதலிடம். 14 வயது பிரிவில் டி.என்.எஸ்.எஸ்., காந்தி வித்யாலயா, 17 மற்றும் 19 வயது பிரிவில் முறையே செயின்ட் ஜோசப் மெட்ரிக், கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி அணிகள் இரண்டாமிடம். மாணவியர் பிரிவு
தனிநபர் 14, 17 மற்றும், 19 வயது மூன்று பிரிவிலும் பிரன்ட்லைன் முதலிடம். 14 வயது பிரிவில் ரோட்டரி மெட்ரிக், 17 வயது பிரிவில், கிட்ஸ் கிளப் மெட்ரிக், 19 வயது பிரிவில், செயின்ட் ஜோசப் மெட்ரிக் அணிகள் இரண்டாமிடம். இரட்டையர் பிரிவில் 14, 17 மற்றும் 19 வயது மூன்று பிரிவிலும் பிரன்ட்லைன் முதலிடம்; கிட்ஸ் கிளப் மெட்ரிக் இரண்டாமிடம்.