உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எப்.ஐ.ஆர்., போடுங்க; ஆசாமி அலப்பறை

எப்.ஐ.ஆர்., போடுங்க; ஆசாமி அலப்பறை

பல்லடம்: பல்லடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, நேற்று கணவனுடன் வந்த பெண், 'எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர், அன்றாடம் குடித்துவிட்டு அடித்து துன்புறுத்துகிறார்.நான் வாங்கிக் கொடுத்த பைக்கில், மதுக்கடை செல்லவும், 'குடி'மகன்களை அழைத்து வருவதற்கும் மட்டுமே பயன்படுத்துகிறார். சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதி மது அருந்துவதற்கே செலவழிக்கிறார்,' என போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.போலீசாரும், அந்நபரிடம் விசாரித்தனர். அதில், 'சார், எனது மனைவியை அடிக்கவில்லை. ஏதேனும் ஆதாரம் இருந்தால், எப்.ஐ.ஆர்., போட்டு, என்னை சிறையில் போடுங்கள்,' என அலப்பறை செய்தார். 'மது குடிப்பதை விடுத்து, மனைவி குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்காக நீங்கள் வாழுங்கள்.மீண்டும் இது போன்ற ஒரு புகார், குற்றச்சாட்டு வரக்கூடாது,' என, அறிவுரை வழங்கி இருவரையும் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை