உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பனியன் நிறுவனத்தில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் பொருள் சேதம்

பனியன் நிறுவனத்தில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் பொருள் சேதம்

திருப்பூர்; திருப்பூர், கொங்குமெயின் ரோட்டில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. பீகாரை சேர்ந்தவர் அஜய்குமார் அகர்வால், 44. அவிநாசி ரோடு, காந்தி நகரில் குடும்பத்துடன் வசிக் கிறார். திருப்பூரில் சில இடங்களில் இவருக்கு சொந்தமான பனியன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் இவர் பனியன் ரகங்களை உற்பத்தி செய்து அனுப்பி வருகிறார். கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ். நகர், 2வது வீதியில், இவருக்குச் சொந்தமான பனியன் உற்பத்தி நிறுவனம் இரண்டு மாடிக்கட்டடத்தில் இயங்குகிறது. நேற்று காலை, முதல் தளத்தில் உள்ள கட்டடத்திலிருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் கட்டடம் முழுவதும் தீ பரவி எரியத்துவங்கியது. இதனை பார்த்த சிலர், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் நிறுவனத்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து அதன் வழியாக தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுப்படுத்தினர். இருப்பினும், தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், மெஷின்கள் ஆகியன நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு குறித்து வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்