ஸ்டேஷன்களில் கொடியேற்றம்
திருப்பூர்; குடியரசு தின விழாவையொட்டி, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ராஜேந்திரன் தேசிய கொடியேற்றினார்.பின், மாநகர எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் மூலம் தேசிய கொடி ஏற்றப்பட்டது.மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகம், வடக்கு, தெற்கு தீயணைப்பு துறை வளாகம், மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.