உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண் சிகிச்சைக்கு இலவச முகாம்

கண் சிகிச்சைக்கு இலவச முகாம்

உடுமலை; உடுமலை அருகே, பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, எழுமின் அறக்கட்டளை மற்றும் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், கண்பரிசோதனை இலவச முகாம் நடந்தது.எழுமின் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் துரைமுருகன் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த, 110 பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, 20 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் லோகநாதன், வீரக்குமார், கோபிநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை