தி சென்னை சில்க்ஸ் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
திருப்பூர்; தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் பத்மா சிவலிங்கம் பிறந்த நாளையொட்டி, தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீதங்கம் ஜூவல்லரி, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், திருப்பூர், காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். கண் அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில் பங்கேற்றோருக்கு கண்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.