உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  இலவச தீத்தடுப்பு பயிற்சி முகாம்;   பாதுகாவலர்களுக்கு நடந்தது

 இலவச தீத்தடுப்பு பயிற்சி முகாம்;   பாதுகாவலர்களுக்கு நடந்தது

உடுமலை: தீ விபத்து பகுதிக்கு தீயணைப்பு துறையினர் வரும் முன், அங்குள்ள பாதுகாவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, உடுமலை தீயணைப்பு துறையினர் நேற்று பயிற்சி அளித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள, 384 தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்கள் வாயிலாக, அடுக்குமாடி குடியிருப்பு, மருத்துவமனை, தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பள்ளிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் பாதுகாவலர்களுக்கு, தீயணைப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, தீயணைப்புத்துறை இயக்குனர் சீமாஅகர்வால் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பாதுகாவலர்களுக்கு இலவச தீத்தடுப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில், பாதுகாவலர்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களில், தீ விபத்துகள் ஏற்படாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தீ விபத்துகள் ஏற்பட்டால் தீயணைப்பு துறையினர் விபத்து இடத்துக்கு வரும் முன், தீயை கட்டுக்குள் கொண்டு வருதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. விபத்துகளின் போது, இந்த தீத்தடுப்பு முறைகளை பாதுகாவலர்கள் தவறாமல் பயன்படுத்த வேண்டும் என, தீயணைப்புத்துறையினர் அறிவுரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை