/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சம்ரத் திட்டத்தில் இலவச பயிற்சி; 30 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கல்
சம்ரத் திட்டத்தில் இலவச பயிற்சி; 30 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கல்
உடுமலை; உடுமலை ஸ்ரீ ஆண்டாள் கல்வி அறக்கட்டளையில், 'சம்ரத்' திட்டத்தின் கீழ், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை நிறைவு செய்த, 30 பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விசைத்தறி வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிறுவனத்தின் இளநிலை உதவியாளர்கள் விஜயகுமார், சந்திரசேகர் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் சான்றிதழ்களை வழங்கினர். ஸ்ரீ ஆண்டாள் அறக்கட்டளை நிர்வாகிகள் விஸ்வநாதன், மகுடீஸ்வரன், சக்திவேல் நன்றி தெரிவித்தனர்.