உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதலிடத்தில் இருந்து மூன்றாமிடம்

முதலிடத்தில் இருந்து மூன்றாமிடம்

திருப்பூர்: பிளஸ் 2 தேர்வு முடிவு என்றாலே, சி.இ.ஓ., அலுவலகம் கொண்டாட்டத்துக்கு தயாராகி விடும்.கடந்த, 2022ல் மாநிலத்தில் ஏழாமிடம் பெற்றிருந்த திருப்பூர், 2023ல் ஐந்து இடங்கள் முன்னேறி, இரண்டாமிடம் பெற்றது. சி.இ.ஓ., அலுவலகத்தில் கேக் வெட்டி, மாவட்ட கல்விஅதிகாரிகள் கொண்டாடினர். 2024ல் முதலிடம் பெற்றது, திருப்பூர். கலெக்டர் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் லட்டு கொடுத்து சி.இ.ஓ., மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.நேற்று காலை, 8:25 மணிக்கு சி.இ.ஓ., உதயகுமார் அலுவலகம் வந்து விட்டார். அடுத்தடுத்து ஒவ்வொரு அலுவலராக வர துவங்கினர். 8:55 மணிக்கு அனைவரும் சி.இ.ஓ., அறை, கம்ப்யூட்டர் முன் ஆஜராகினர். மாநிலத்தில் முதலிடம் எதிர்பார்த்த நிலையில், மூன்றாமிடம் என்ற தகவல் வந்ததால், சற்று சோர்வடைந்தனர். கலெக்டர் கிறிஸ்துராஜூவுக்கு தகவல் தெரிவித்தனர்.'அவிநாசி கோவில் தேர்த்திருவிழா நிகழ்ச்சியில் உள்ளேன்; எத்தனையாவது இடம்' என கேட்டார். 'இம்முறை மூன்றாமிடம் சார்' என தெரிவிக்க, 'சரி... தகவல்கள் அளிப்பதை நீங்களே செய்து விடுங்கள்' எனக் கூறி விட்டார். பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானவுடன் முன்னேற்றத்தை கண்டு இரண்டு ஆண்டுகள் குஷியாக கலெக்டர் அறைக்கு செல்லும் மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள், நேற்று மதியம் வரை சற்று ஏமாற்றத்துடன் காணப்பட்டனர். அதன்பின் இயல்பு நிலைக்கு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை