உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானியத்துடன் பால் பண்ணை அமைக்க நிதி அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு

மானியத்துடன் பால் பண்ணை அமைக்க நிதி அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு

உடுமலை;சுய உதவிக்குழு அமைத்து கால்நடை வளர்ப்பு தொழில் மேற்கொண்டால், மானியத்துடன் சிறு பால் பண்ணை அமைக்க, அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பால் பண்ணைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில், மத்திய, மாநில அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.நபார்டு வங்கியின் மானியத்துடன் கூடிய பால் பண்ணை கடன் திட்டம், பால் பண்ணை தொழில் முனைவோர் மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகிறது.இதேபோல, தாட்கோ திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர்களுக்கு, பால் பண்ணை அமைக்க மானியம் அளிக்கப்படுகிறது.அவ்வகையில், உடுமலை சுற்றுப்பகுதியைச்சேர்ந்த பலர், சுய தொழில் மேற்கொள்ள முனைப்பு காட்டுகின்றனர். அதில், விவசாயம், கால்நடை வளர்த்தலை பிரதானமாகக் கொண்டுள்ளனர்.எனவே, அனைத்து தரப்பினரும், மானியத்துடன் சிறு பால் பண்ணை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:சுய உதவிக்குழு அமைத்து கால்நடை வளர்ப்பு தொழில் மேற்கொண்டால், மானியத்துடன் சிறு பால் பண்ணை அமைக்க, அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.தனிநபருக்கு, மானியத்துடன் பால் பண்ணை அமைக்க நிதி ஒதுக்குவது கிடையாது. உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள் பலர், புதிதாக கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனர்.அனைத்து தரப்பினரும், மானியத்துடன் சிறு பால் பண்ணை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை