இன்று காந்தி ஜெயந்தி கிராம சபைக்கூட்டம்
உடுமலை : உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சியில், காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடக்கிறது.ஊராட்சிகளில், ஆண்டில் குடியரசு தினம், மே தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில், கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில், காந்தி ஜெயந்தியையொட்டி, உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் காலை, 11:00 மணிக்கு துவங்குகிறது.கிராமங்களில் உள்ள திடக்கழிவுமேலாண்மை திட்டம், கனவு இல்லம், அனைவருக்கும் வீடு திட்டங்களில் பயன்பெறுவதற்கான பயனாளிகள் தேர்வு பட்டியல் ஒப்புதல் பெறுதல், ஜல் ஜீவன் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் குடியிருப்புகள் குறித்த பட்டியலுக்கான ஒப்புதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.மக்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம். அனைத்து துறை அலுவலர்களும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என ஒன்றிய நிர்வாகம் அறிவித்துள்ளது.