மேலும் செய்திகள்
பிரசன்ன விநாயகர் கோவிலில் பள்ளி மழலையர் வழிபாடு
25-Aug-2025
உடுமலை, ; கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மற்றும் இண்டர்நேஷனல் பள்ளிகளில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் அனைவரும் விநாயகரை போற்றி பாட்டு பாடினர். மாணவர்கள் விநாயகர் புராணம் கேட்டறிந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனர். விழாவில் பள்ளித்தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். * உடுமலை ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விழாவையொட்டி மழலையர் பிரிவு மாணவர்கள் விநாயகர், முருகன், சிவன், பார்வதியாக வேடமணிந்து வந்தனர். விநாயகர் திருவுருவ சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளி முதல்வர் மாலா, ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவன தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார் பாராட்டு தெரிவித்தனர்.
25-Aug-2025