பள்ளி அருகே குப்பை சுகாதாரச் சீர்கேடு
பொங்கலுார்:திருப்பூர், தாராபுரம் ரோடு பொல்லிகாளிபாளையத்தில் அரசு துவக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. பள்ளிக்கு அருகே அப்பகுதியை சேர்ந்த சிலர், மூட்டை மூட்டையாக குப்பைகளை கொண்டு வந்து ரோட்டோரத்தில் கொட்டுகின்றனர். குப்பைகளில் இருந்து வரும் துர்நாற்றம் வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, பள்ளி அருகே குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதி க்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.