உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குப்பை தேங்கும் விவகாரம்: 25ல் ஆர்ப்பாட்டம்: தயாராகும் அ.தி.மு.க.

 குப்பை தேங்கும் விவகாரம்: 25ல் ஆர்ப்பாட்டம்: தயாராகும் அ.தி.மு.க.

திருப்பூர்: குப்பை பிரச்னை, எஸ்.ஐ.ஆர்., பணியில் ஆளுங்கட்சியினரின் தலையீடு ஆகியவற்றை கண்டித்து வரும் 25 ம் தேதி, அ.தி.மு.க., சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்தார். ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், கே.எஸ்.சி., பள்ளி வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. எம்.எல்.ஏ., விஜயகுமார் மற்றும் அ.தி.மு.க., ஒன்றிய, பகுதி செயலாளர்கள் பங்கேற்றனர். இதில், மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: திருப்பூர் மாநகர பகுதிகளில், குப்பை அள்ளப்படாமல், தேங்கிவருகிறது. வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள ஒரு குப்பை மேட்டுக்கு என்னை அழைத்து சென்றனர். ஈக்களும், கொசுக்களும் என்னை மொய்த்தன. உடன் வந்தோர் பலர், நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். குப்பை கழிவுகளால், கொரோனாவை விடவும் கொடிய நோய் பரவும் அபாயம் உள்ளது. நாம் போராடினால்தான், தி.மு.க., அரசு, குப்பை பிரச்னையில் ஏதாவது ஒரு வழியை கையாளும். இன்று வீதியில் ஒரு மூலையில் கிடக்கும் குப்பை, நாளை நம் வீட்டுக்கு வந்து விடும். ஆகவே, ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனும், குப்பை பிரச்னையை, தனது சொந்த பிரச்னையாக கருதி, அக்கறையோடு போராட்டத்தில் இறங்கவேண்டும். பொது செயலாளரின் உத்தரவின்படி, 5 ஆயிரம் பேரை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்கான பணிகளில் வேகம் காட்டவேண்டும். திருப்பூர் மாநகார மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பு கவசமாக இருப்பது, அ.தி.மு.க., தான் என்பதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை