உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை மேலாண்மை! பேராசிரியர் வீரபத்மன் சொல்வதென்ன?

குப்பை மேலாண்மை! பேராசிரியர் வீரபத்மன் சொல்வதென்ன?

சமீபத்தில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில், தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் மனிதவள அதிகாரிகள் மட்டத்திலான கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று, 'தொழில் நிறுவனங்களில் குப்பை மேலாண்மை' தொடர்பாக ஆலோசனையும் வழங்கப்பட்டிருக்கிறது.திருப்பூர் பாதுகாப்பு இயக்க நிறுவனரும், திடக்கழிவு ஆலோசகருமான பேராசிரியர் வீரபத்மன் கூறியதாவது:சுப்ரீம்கோர்ட் வழிகாட்டுதல் படி, அந்தந்த நிறுவனத்தினர் குப்பைகளை மேலாண்மை செய்யும் பொறுப்பை, தாங்களே ஏற்க வேண்டும். நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் உணவுக்கழிவு, துணிக்கழிவு உள்ளிட்டவற்றை அன்றயை தினமே அப்புறப்படுத்திவிட வேண்டும். பல நிறுவனங்கள், 2,3 நாட்கள் குப்பையை சேகரித்து வைத்து, அகற்றுவதால், துர்நாற்றம் வீசுகிறது.அவற்றை கையாள்வதும் கடினமான செயலாக இருக்கிறது.நிறுவனங்களில் இருந்து குப்பையை பெற்று, மேலாண்மை செய்வதாக கூறும் சில நிறுவனங்கள், இரவு நேரங்களில், ரோட்டோரம், பாலத்தின் அடியில் என பொது வெளியில் கொட்டி விடுகின்றனர்.ஆய்வறிக்கை படி, 70 சதவீதம் குப்பை, நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதில், பாலிதின், ஸ்டிக்கர், பல வண்ண நிறங்கள் ஒட்டப்பட்ட பாலிதின் உள்ளிட்ட, 7, 8 வகையான குப்பைகள் வெளியேறுகிறது. காட்டன் கழிவுகள் வெளியேறுவதில்லை; அவற்றை வணிக ரீதியாக பயன்படுத்துகின்றனர்; இது வரவேற்கதக்கது.நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கான கழிவறை சுத்தம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எந்தளவு பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது என்பது, தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது. அந்த தணிக்கை வரையறைக்குள், குப்பை மேலாண்மையையும் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை