சிறுமி கர்ப்பம்; வாலிபர் கைது
திருப்பூர்; பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் சோனுகுமார், 22. திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே மாநிலத்தை சேர்ந்த, 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.சிறுமிக்கு திடீரென உடல்நலப் பிரச்னை ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அழைத்து சென்று பரிசோதித்த போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. சிறுமிக்கு குறை மாதத்தில் குழந்தை பிறந்தது. பெற்றோர் புகாரின் பேரில், கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார், சோனுகுமார் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.