குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுங்க! கிராம மக்கள் எதிர்பார்ப்பு
உடுமலை; கோடை துவங்க உள்ளதையொட்டி, ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தந்து நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கினறனர்.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. கோடை பருவகாலம் துவங்குவதையொட்டி ஊராட்சிகளில், தற்போது முதல் குடிநீர் பிரச்னைகள் தலைதுாக்க துவங்கியுள்ளது.திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு ஊராட்சிகளில், கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.உடுமலை சுற்றுப்பகுதியில், குடிநீர் பிரச்னை தீராத ஒன்றாக இருந்து வரும் நிலையில், விரைவில் கோடை துவங்க உள்ளதையொட்டி, பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.பல ஊராட்சிகளில், வீடுகளுக்கு குடிநீர் விடப்படும் நேரம் குறைவாக இருப்பதோடு, முறையான சுழற்சி இல்லாமல் உள்ளது.குடிநீர் விடப்படும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்து, அவர்களின் பணிகளும் பாதிக்கப்படுகிறது.தேவையில்லாத நேரத்திலும், மிக குறைவான இடைவெளியிலும் குடிநீர் வினியோகிப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கிறது.இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் தேவைக்கு அதிகமாகவும், பல பகுதிகளில் தேவையில்லாமல் அதிக நேரமாகவும் குடிநீர் வினியோகம் உள்ளது.முன்பு ஒன்றிய அலுவலகத்தில் 'குடிநீர் கட்டுபாட்டு அறை', என்று அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுஒன்றிய அலுவலகம் மாற்றப்பட்டுள்ள நிலையிலும், குடிநீர் பிரச்னை குறித்த புகார்களுக்கு ஒன்றிய நிர்வாகத்தினர் முக்கியத்துவம் அளித்து, சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், கிராமங்களில் நேரடி ஆய்வு நடத்தி, குடிநீர்வினியோகம் குறித்து ஒன்றிய நிர்வாக அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.