உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பஸ் நடத்துனர் அதிரடி பணி நீக்கம்

அரசு பஸ் நடத்துனர் அதிரடி பணி நீக்கம்

திருப்பூர்; துப்புரவு பணியாளரை அவமதித்ததாக அரசு பஸ் நடத்துனர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து கணக்கம்பாளையத்துக்கு, 43ம் நம்பர் டவுன்பஸ் (டி.என்., 39 என் 0583) இயங்கியது. தினக்கூலி பணியாளராக நடத்துனர் முரளி பணியாற்றினார். தாறுமாறாக கட்டணம் வசூலித்து, தவறாக பயணச்சீட்டு வழங்கியதுடன், பஸ்சில் பயணித்த துப்புரவு பணியாளர்களை அவமதித்ததாக, சரவணன் என்பவர், திருப்பூர் அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளரிடம் புகார் தெரிவித்திருந்தார். புகாரை விசாரித்த அதிகாரிகள், நடத்துனர் முரளியை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை