மேலும் செய்திகள்
மே 1ல் கிராம சபா
26-Apr-2025
உடுமலை,; தொழிலாளர் தினமான, மே 1ல், ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 265 கிராம ஊராட்சிகளிலும், தொழிலாளர் தினமான, மே 1ம் தேதி, காலை 11:00 மணிக்கு, கிராம சபை கூட்டம், ஊராட்சிகளில், பொது இடங்களில் நடக்கிறது.இதில், கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றினை அடிப்படையாக கொண்டு கட்டட அனுமதி வழங்குதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் ஊராட்சி பொதுமக்களால் கொண்டு வரப்படும் கோரிக்கைகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். இதில், ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் பங்கேற்குமாறு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
26-Apr-2025