மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
02-Feb-2025
திருப்பூர்; திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், பத்மாவதிபுரம், சிங்காரவேலன் நகர் அறிவு திருக்கோவில் திறப்பு விழா, வரும், 16ம் தேதி நடக்கிறது.காலை, 10:00 மணிக்கு உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன், கொடியேற்றி மற்றும் அறிவுத்திருக்கோவிலை திறந்து வைத்து பேசுகிறார். உலக சமுதாய சேவா சங்க துணைத் தலைவர் 'தி சென்னை சில்க்ஸ்' ஆறுமுகம், தலைமை வகித்து பேசுகிறார்.நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வாக, முற்பகல், 11:40 மணிக்கு, உலக சமுதாய சேவா சங்க துணைத் தலைவர் சுந்தரராஜ் தலைமையில், நிகழ்ச்சி நடக்கிறது. மதியம், 12:20 மணிக்கு உலக சமுதாய சேவா சங்க துணைத் தலைவர் 'ராம்ராஜ் காட்டன்' நாகராஜன் பேசுகிறார். சிறப்பு அழைப்பாளராக பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பங்கேற்கிறார்.மூன்றாம் அமர்வாக, மாலை, 4:30 மணிக்கு கிராமிய சேவை திட்ட இயக்குனர் முருகானந்தம் தலைமையில், விசுவநாதன் குழுவினரின், வேதாத்திரியம் கும்மி நிகழ்ச்சி நடக்கிறது. நான்காம் அமர்வாக, மாலை, 5:30 மணிக்கு, திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின், 31ம் ஆண்டு விழா நடக்கிறது. உலக சமுதாய சேவா சங்க துணைத் தலைவர் 'ராம்ராஜ் காட்டன்' நாகராஜன் தலைமை வகிக்கிறார். சிறப்பு அழைப்பாளராக பாரதிய வித்யா பவன் ஸ்கூல் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்புரை ஆற்றுகிறார். அறிவுத்திருகோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, வரும், 17 ம் தேதி துவங்கி, அடுத்த மாதம், 6ம் தேதி வரை தினமும், மாலை, 5:30 மணிக்கு, சிறப்பு சொற்பொழிவுகள் நடக்கின்றன.
02-Feb-2025