வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் பசுமை ஆர்வலர்கள் கொதிப்பு
திருப்பூர்; திருப்பூர் வடக்கு தாலுகா, கோல்டன் நகர் பகுதியில், மரத்தைவெட்டியதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.திருப்பூர், என்.ஆர்.கே., புரம் பள்ளியின் பின்புறம், பொதுக்கழிப்பிடம் அருகே இருந்த, 50 ஆண்டுகளாக வளர்ந்த பெரிய மரத்தை, சிலரது சுயலாபத்துக்காக வெட்டியுள்ளனர்.வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்து, மரம் வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.இயற்கையை பாதுகாக்கும் மரங்களை, வெட்டி அழிக்கும் இதுபோன்ற நபர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பசுமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.