மேலும் செய்திகள்
பசுமை பூக்கும் பாக்குத்தோப்பு !
26-Sep-2024
'ஒவ்வொருவரும், தனது வாழ்வில், ஐந்து மரங்களையாவது வளர்க்க வேண்டும்' என்பது, கலாமின் அறிவுரை. கலாமின் அறிவுரையை ஏற்று, மரம் வளர்க்கும் அறப்பணியை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது 'வெற்றி' அறக்கட்டளை. டிரீம் -20' பசுமை அமைப்பு, வேர்கள், வெள்ளகோவில் நிழல்கள், காங்கயம் துளிகள் என, இளம் பசுமைப்படையுடன் கரம் கோர்த்து, இதுவரை, மொத்தம், 19.50 லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்துள்ளது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், ஒன்பது ஆண்டுகளில், 18 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, மரமாக்கப்பட்டது; 10ம் ஆண்டான, இந்தாண்டு, மூன்று லட்சம் மரக்கன்றுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குன்னத்துார் அடுத்துள்ள காவுத்தம்பாளையம் கிராமம் மேற்கு தச்சம்பாளையத்தில், விவேகானந்தன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன. அப்துல்கலாம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், நேற்று, ஒரே இடத்தில், 5,328 சவுக்கு மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
26-Sep-2024