உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 3 பேர் மீது குண்டாஸ்

3 பேர் மீது குண்டாஸ்

திருப்பூர்; திருப்பூர், ஈஸ்வரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வீரசிவகுமார், 41. கடந்த மாதம், 6ம் தேதி வீட்டுக்கு வந்த நண்பர்கள் ஜெபராஜ், 26, அரவிந்த்குமார், 30, மோகன்ராஜ், 34 ஆகியோர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர்.மதுபாட்டிலை உடைத்து, குத்திவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்து, வீட்டிலிருந்த ஏழரை பவுன் தங்க நகைகளை திருடி விட்டுத் தப்ப முயன்றனர்.தகவலறிந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.கைதான மூன்று பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை