உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குட்கா, கஞ்சா ஒழித்துக்கட்ட களமிறங்கிய போலீஸ்

குட்கா, கஞ்சா ஒழித்துக்கட்ட களமிறங்கிய போலீஸ்

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராயம் இறப்பு எதிரொலியாக மாநகரில் சட்டவிரோத மதுவிற்பனை, கஞ்சா, புகையிலை விற்பனை குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளனர்.தமிழகத்தில் சமீபகாலமாக தாராளமாக கிடைக்கும் போதை வஸ்துகளை சிறுவர்களும், இளம் தலைமுறையினரும் பயன்படுத்தி சீரழியுகின்றனர். மாநிலம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, பதுக்கல் உள்ளிட்டவை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில், 53 பேர் இறந்தனர். 80க்கும் மேற்பட்டோர் பல்வேறு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, போலீசார் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தொழிலாளர் நகரமாக உள்ள திருப்பூரில் சட்டவிரோத மதுவிற்பனை, கஞ்சா, குட்கா போன்றவை சர்வ சாதாரணமாக உள்ளது. மாநகரம் மற்றும் புறநகரில் உள்ள போலீசார் இதுதொடர்பான புகார்களுக்கு தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக, பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குட்கா விவகாரத்தில் கைது நடவடிக்கையோடு இல்லாமல், கடைகளுக்கு 'சீல்', அபராதம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எதிரொலியாக மாநகரம், புறநகரில் கமிஷனர், எஸ்.பி., உத்தரவின் பேரில், மூன்று நாட்களாகவே ஒவ்வொரு ஸ்டேஷன் பகுதியில் கஞ்சா, குட்கா, சட்டவிரோத மதுவிற்பனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை, சாராயம் பறிமுதல் குறித்து எந்த வழக்கும் பதியப்படவில்லை. ஆனால், குட்கா, கஞ்சா, சட்டவிரோத மது விற்பனைகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டிய கட்டாயம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அன்றாடம் ஸ்டேஷன் நிலவரங்கள் குறித்து உளவுப்பிரிவு போலீசார் கமிஷனர், எஸ்.பி.,க்கு தகவல் அளித்து வருகின்றனர். இவ்விஷயத்தில் எவ்வித அலட்சியம், புகார்களுக்கு ஆளாக கூடாமல், பணியை திறம்பட செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நடவடிக்கை பாயும்

சில மாதங்களுக்கு ஏற்பட்ட போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஆளும்கட்சியை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் கட்சிகளின் கடுமையான குற்றச்சாட்டுகளால் குட்கா, கஞ்சா குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்தனர். தற்போது, கள்ளச்சாராயம் குடித்து நிகழ்ந்த இறப்புகளால், சட்டவிரோத விற்பனை போன்ற அனைத்தையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தொழிலாளர் நகரத்தில் இதுபோன்ற எந்த பிரச்னையும் ஏற்பட்டு விடக்கூடாது. போலீசார் தங்களின் பணியில் எவ்வித அலட்சியம் இல்லாமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்களில் சிக்கும் போலீசார் மீது நடவடிக்கை பாயும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

RSK
ஜூன் 23, 2024 16:25

எத்தனை நாளைக்கு? பேருக்கு நாலு பேரை புடிப்பாங்க, நாலு கேசு போடுவாங்க. அப்புறம் கப்பம் கட்டிவிட்டுட்டு வெளியே வந்து பழைய தொழிலைத்தான் செய்வாங்க. அட போங்கப்பா. ஆனால் இதில இருந்து ஒன்னு மட்டும் நல்லா தெரியுது. குட்காவும் கஞ்சாவும் இன்னும் ஒழிக்கப்படவில்லை. விடியல் அபாரம்.


Kadhir
ஜூன் 23, 2024 06:38

They are performing Surya Namaskar after becoming blind


ஆரூர் ரங்
ஜூன் 22, 2024 21:52

பஞ்சு மிட்டாய் விற்பவர்களை பிடிக்கவே போலீஸூக்கு நேரம் போதவில்லை. எங்கேயும் எப்போதும் கிடைக்கும் சாராயத்தை எப்படி பிடிப்பது? மந்திரிக்கு கப்பம் கட்டுபவர்களைப் படித்துவிட்டு பின்னர் ஆயுதப்படைக்கு விரட்டப்பட யாரும் தயாராக இல்லை


GMM
ஜூன் 22, 2024 21:45

தமிழ்நாடு போலீஸ் என்று உள்ளது. ஆதிக்க உணர்வு ஏற்படும். தமிழ்நாடு ஸ்டேட் போலீஸ், இந்திய அரசு என்று இருக்க வேண்டும். தனக்கு மேல் ஒரு அமைப்பு உள்ளது என்ற கட்டுப்பாடு உணர்வு வரும். போதை ஒழிப்பு எளிதல்ல. மிக பெரிய நெட்ஒர்க் இருக்கும். முதலில் துணிந்து மது விலக்கு அமுல்படுத்த வேண்டும். கட்சி அரசியல் தலைவர்கள் சிபாரிசு செய்ய போலீஸ் நிலையம் உள் நுழைய, பேச அஞ்ச வேண்டும். தமிழக திராவிட மது உற்பத்தியை விரும்பும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.


M R Lakshiminarayanan
ஜூன் 22, 2024 21:09

கும்பகோணம் தீவிபத்து மாதிரி சில நாள் கள்ளச்சாராயம் ஒழிப்பு என செய்தித் தாள்களில் செய்திகள் வரும். பிறகு கள்ளக்குறிச்சி தலைப்பு செய்திகளில் வராது.


Jai Sankar Natarajan
ஜூன் 22, 2024 20:50

குட்கா, கஞ்சா ஒழித்துக்கட்ட களமிறங்கிய போலீஸ் சிரிப்புதான் வருது. இவ்வளவு நாளா கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டி இருந்தார்களா ? யாருக்கு தெரியும் திராவிடியா தலைமை அழுத்தமாக கூட இருக்கலாம்.


அப்புசாமி
ஜூன் 22, 2024 20:48

சிரிப்பு செய்திக்கு நன்றி.


Kasimani Baskaran
ஜூன் 22, 2024 20:44

இதுவரை காவல்த்துறை வேலையே செய்யவில்லை என்பது போல இருக்கிறது. இதுவரை கண்டும் காணாமல் இருந்தது உண்மை போலத்தான் தெரிகிறது.


S. Gopalakrishnan
ஜூன் 22, 2024 20:40

கெட்ட பின்பு ஞானி ....


Pandi Muni
ஜூன் 22, 2024 19:31

அப்போ அந்த சிந்தடிக் போதை மருந்து பிஸ்னஸ் அவ்வளவுதானா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை