கிராமங்களில் குட்கா தாராள புழக்கம்
திருப்பூர்; திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகரில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் குறித்து கண்காணித்து போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை என்பது பெயரளவில் இருப்பதால், பல்லடம், காரணம்பேட்டை, கோடங்கிபாளையம் கிராமத்தில் உள்ள சில மளிகை கடைகளில் பதுக்கி வைத்து, குட்கா விற்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தாலும், நடவடிக்கை என்பது இல்லை. போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.