பள்ளி மாணவர்களுக்கு ஹாக்கி பயிற்சி முகாம்
உடுமலை : பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கான ஹாக்கி பயிற்சி முகாம் துவங்கியது.பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர்கள் ஹாக்கி போட்டியில், மாநில, தேசிய அளவில் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர். பள்ளியின் சார்பில், மாணவர்களுக்கு அதற்கான பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.தற்போது, அப்பள்ளியில், மாணவர்களுக்கான கோடைக் கால ஹாக்கி பயிற்சி முகாம் கடந்த 24ம் தேதி துவங்கியது. முகாம் மே., 6ம்தேதி வரை 13 நாட்கள் பள்ளி மைதானத்தில் நடக்கிறது.இப்பயிற்சியில், ஹாக்கி விளையாட்டின் அடிப்படை திறன்கள், நுணுக்கங்கள், விளையாடும் முறைகள், யோகா உள்ளிட்ட அனைத்தும் முகாமில் கற்பிக்கப்படுகிறது. பள்ளி தலைமையாசிரியர் பாபு முகாமை துவக்கி வைத்து, மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். துவக்க விழாவில், விளையாட்டு வீரர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். முகாமில், ஆறாம் வகுப்பு முதல், தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதியோர் உட்பட 40 மாணவர்கள் தீவிர பயிற்சி பெறுகின்றனர்.