உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தற்கொலை செய்து கொள்கிறேன் :வீடியோ வெளியிட்ட போஸ்ட்மேன்

 தற்கொலை செய்து கொள்கிறேன் :வீடியோ வெளியிட்ட போஸ்ட்மேன்

திருப்பூர்: பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு விட்டு மாயமான போஸ்ட்மேன் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். காங்கயம், தாராபுரம் ரோட்டைச் சேர்ந்தவர் ஜெயகாந்தன், 42. காங்கயம் போஸ்ட் ஆபீசில் போஸ்ட்மேனாக, 13 ஆண்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு விட்டு மாயமாகி விட்டார். வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது: போஸ்ட் ஆபீசில் நான் 13 ஆண்டாக் பணியாற்றுகிறேன். இரண்டாண்டாக கடும் பணி சுமை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். குணப்படுத்த முடியாத அரிய வகை நோய் எனக்கு உள்ளது. விடுப்பு கேட்டால் உயர் அதிகாரி தர மறுக்கிறார். சம்பளம் பிடித்தம் செய்கிறார். நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். என் உடலை என் மனைவியிடம் ஒப்படைத்து விடுங்கள். இதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுங்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார். வீடியோ வெளியிட்டு விட்டு அவர் எங்கோ சென்று விட்டார். எங்கு சென்றார் என எதுவும் தெரியவில்லை. இது குறித்து அவர் குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் காங்கயம் பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ