உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தென்னை வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த யோசனை

தென்னை வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த யோசனை

பல்லடம்; கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், பல்லடம் அடுத்த, நாரணாபுரம் கிராமத்தில், தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர். வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப் படுத்தும் 'மஞ்சள் ஒட்டுப்பொறி' தொழில்நுட்பம் குறித்து, விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ''தென்னையில், வெள்ளை ஈக்கள் தாக்கப்பட்ட இலையின் மீது தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடிக்க வேண்டும். தென்னையின் அடிபாகத்தில் இருந்து, 6 அடி உயரத்தில் மஞ்சள் ஒட்டுப்பொறியை கட்டி வைக்க வேண்டும். மஞ்சள் நிறத்துக்கு, வெள்ளை ஈக்கள் கவரப்பட்டு, பொறியில் ஒட்டிக் கொள்வதால் ஈக்களின் தாக்கம் கட்டுப்படும்'' என்று மாணவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ