உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  திருப்பூர் தி.மு.க., அலுவலகத்தில் முறைகேடு மின் இணைப்பு கட்

 திருப்பூர் தி.மு.க., அலுவலகத்தில் முறைகேடு மின் இணைப்பு கட்

திருப்பூர்: திருப்பூர், தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் முறைகேடாக வழங்கப்பட்டிருந்த மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., கட்சி அலுவலகம், ராஜாராவ் வீதியில் உள்ளது. திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் மாவட்ட செயலராக உள்ளார். இரு தளங்களாக உள்ள இந்த கட்டடத்தில் மூன்று வீட்டு உபயோக மின் இணைப்புகளும், கூடுதலாக இரண்டு வணிகரீதியான இணைப்புகளும் பயன்பாட்டில் உள்ளன. திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன் புகாரில், கடந்த வாரம் மின் வாரிய அதிகாரிகள், 85,000 ரூபாய் அபராதம் விதித்தனர். வீட்டு இணைப்புகள், வணிகரீதியான இணைப்புகளாக மாற்றப்பட்டன. இருப்பி னும் ஒரே கட்டடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் பயன் படுத்துவது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து, அவிநாசியில் நடந்த மின் நுகர்வோர் குறை கேட்பு கூட்டத்தில், நடவடிக்கை எடுக்க சரவணன் வலியுறுத்தினார். இதையடுத்து, முறைகேடாக வழங்கப்பட்ட நான்கு மின் இணைப்புகளையும் மின் வாரியத்தினர் நேற்று முன்தினம் துண்டித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை