உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  இனாம் நில விவகாரம்: விவசாயிகள் ஆலோசனை

 இனாம் நில விவகாரம்: விவசாயிகள் ஆலோசனை

திருப்பூர்: இனாம் நில விவகாரத்தில் விவசாயிகளை மிரட்டும் நடவடிக்கையைக் கண்டித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஏறத்தாழ 13 லட்சம் ஏக்கர் இனாம் நிலம், நீண்ட காலமாக பட்டா மற்றும் பத்திர ஆவணங்களுடன் உள்ளது. இதை ஹிந்து சமய அறநிலையத்துறை தற்போது எந்த ஆவணங்களும் இல்லாமல் உரிமை கொண்டாடுகிறது; அந்த நிலங்களை பூஜ்ஜிய மதிப்பு ஏற்படுத்தி ஆவணங்களில் மாற்றம் செய்து வருகிறது. இந்த நடவடிக்கைகளை கண்டித்தும், இனாம் நில விவசாயிகள் மற்றும் குடியிருப்போரை பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று திருப்பூரில் விவசாயிகள் ஆலோசனை கூட்டமும் ஆர்ப் பாட்டமும் நடத்தினர். திருப்பூர் முத்தணம் பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், இனாம் நில விவசாயிகள் மற்றும் குடியிருப்போர் சங்கம் ஆகியன சார்பில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். மாநில தலைவர் சண்முக சுந்தரம், திருப்பூர் மாவட்ட தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து விவாதித்தனர். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை