உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்பு துவக்க விழா

வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்பு துவக்க விழா

உடுமலை : உடுமலையில் லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளையின் சார்பில், வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறகட்டளை வளாகம் உள்ளது. இங்கு குரூப் 4, மத்திய, மாநில காவல் ஆய்வாளர்களுக்கான பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி, யோகா, தையல் மற்றும் ஆரி ஒர்க் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.இப்பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு, அறக்கட்டளையின் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. விழாவில் அறக்கட்டளை தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.பல்வேறு கல்லுாரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், தொழில்துறையினர் பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.மேலும், திருப்பூர் ஜெய் ஸ்ரீராம் இன்ஜினியரிங் கல்லுாரி சார்பில் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு, 10 கம்ப்யூட்டர்கள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து அடுத்தகட்ட பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டன.ஏற்கனவே பயிற்சி பெற்ற மாணவர்கள், தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். அமராவதிநகர் சைனிக் பள்ளி ஆசிரியர் இளமுருகு விழாவை தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை