வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பழனி பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்கு நீர் திறப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
உடுமலை,; பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திற்கு, வரும் 29ல் தண்ணீர் திறக்க உள்ள நிலையில், காண்டூர் கால்வாய் வழியாக, நீர் கொண்டு வந்து திருமூர்த்தி அணையில் சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது.பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்படுகிறது.இரண்டாம் மண்டல பாசன நிலங்களுக்கு, கடந்தாண்டு, ஆக.,18 முதல், கடந்த, ஜன., 4 வரை, 5 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு, நிறைவு செய்யப்பட்டது.தொடர்ந்து, காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, மூன்றாம் மண்டல பாசனத்தை, வரும், 29 முதல் துவக்கும் வகையில், நேற்று முன்தினம், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக நீர் எடுக்கும் பணி துவங்கியது. இரு நாட்களாக திருமூர்த்தி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.திருமூர்த்தி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 44.27 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கனஅடியில், 1,302.02 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 703 கனஅடி நீர்வரத்தும், அணையிலிருந்து, குடிநீர், இழப்பு என, 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
பழனி பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்கு நீர் திறப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...