மேலும் செய்திகள்
ரூ.163 கோடியில் சாலை விரிவாக்கம்
28-Aug-2024
காங்கேயம் : காங்கேயத்தில் சென்னிமலை ரோட்டில், சாலை மேம்பாட்டு திட்டத்தில், இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. திட்டுபாறை முதல் ஆலாம்பாடி வரை, ௬ கி.மீ., தொலைவுக்கு, 37 கோடி ரூபாயில் இந்த பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் விரிவாக்கப்பணியை திருப்பூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரத்தினசாமி ஆய்வு மேற்கொண்டார். பணியை தரமாகவும், விரைந்து முடிக்கவும் ஒப்பந்தாரர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது காங்கேயம் உதவி கோட்ட பொறியாளர் தங்கவேல், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.
28-Aug-2024