உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நஞ்சில்லாத காய்கறி உற்பத்திக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

நஞ்சில்லாத காய்கறி உற்பத்திக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

உடுமலை; நஞ்சில்லா காய்கறி உற்பத்திக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.அத்துறையினர் கூறியதாவது: காய்கறி சாகுபடியில் அதிக ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்க்க, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை விவசாயிகள் பின்பற்றலாம்.பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்த, உழவியல், இயந்திரம், மரபு, உயிரியல் மற்றும் ஒழுங்கு நடைமுறைகளை பின்பற்றலாம். பாரம்பரிய முறைப்படி, வழக்கமான பண்ணை நடவடிக்கைகள் வாயிலாக, பூச்சிகளை கட்டுப்படுத்துவதாகும். நாற்றாங்காலில், பூச்சிகளை தவிர்க்க, தாவர குப்பையை அகற்றுதல், கோடையில் ஆழமாக உழவு செய்தல் உட்பட பணிகள் உள்ளடங்கும். உயிரியல் முறையில், பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.இம்முறையானது, வாழும் உயிரினங்களை பயன்படுத்தி, தேவையற்ற, பூச்சிகளை, கட்டுப்படுத்துவதாகும்.ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளால், உற்பத்தியாகும் தானியம் நஞ்சில்லாமல், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும்.இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி