உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் ஆர்.கே.ஆர்., குருவித்யா வெற்றி

 பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் ஆர்.கே.ஆர்., குருவித்யா வெற்றி

உடுமலை: பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், ஆர்.கே.ஆர்., குருவித்யா மேல்நிலைப்பள்ளி அணியினர் வெற்றி பெற்றனர். உடுமலை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியில், ஆர்.கே.ஆர்., குருவித்யா, ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக்., ஆர்.கே.ஆர்., ஞானோதயா மெட்ரிக்., பள்ளி அணிகள் பங்கேற்று விளையாடின. ஆர்.கே.ஆர்., குருவித்யா முதலிடமும், ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் இரண்டாமிடமும் பிடித்தன. சிறந்த பேட்ஸ்மேனாக, கிரிக்ஸ் மெட்ரிக்., ராஜதேவேஷ், சிறந்த பச்சுவீச்சாளராக, குருவித்யா பள்ளி அகில் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, ஆர்.கே.ஆர்., கல்வி குழுமத்தின் தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார், பள்ளி முதல்வர்கள் மாலா, ஐரீன்கீதா, செல்வகுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்